Thursday, March 22, 2012

ஜாமக்கோள் ஆருடம்

ஜாமக்கோள் ஆருடம்

ஜாமக்கோள் ஆருடம் என்பது சாமத்தில் கோள்கள் நிற்கும் நிலையை வைத்தும் கேள்வி கேட்பவர் ஏறி நிற்கும் நிலையை வைத்தும் ஆருடம் மூலம் பிரச்சனைக்கு பதில் அளித்தல் ஆகும்.

ஜாமம்
ஜாமம் என்பது பொழுது ஆகும்.
ஒரு நாளைக்கு 16 ஜாமம்
ஒரு ஜாமத்திற்கு 1.30 மணி நேரம் ஆகும்.
காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 8 சாமம்
மாலை 6.00 மணி முதல் காலை 6.00 மணி வரை 8 சாமம்

கோள்
கோள் என்பது கிரகங்களைக் குறிக்கும். கிரகங்கள் 8
கதிர் --------------- சூரியன் - ஞாயிற்றுக்கிழமைக்கு அதிபதி
சேய் --------------- செவ்வாய் - செவ்வாய்க்கிழமைக்கு அதிபதி
பொன் --------------- வியாழன் - வியாழக்கிழமைக்கு அதிபதி
மால் --------------- புதன் - புதன்கிழமைக்கு அதிபதி
புகர் --------------- சுக்ரன் - வெள்ளிக்கிழமைக்கு அதிபதி
மந்தன் --------------- சனி - சனிக்கிழமைக்கு அதிபதி
மதி --------------- சந்திரன் - திங்கட்கிழமைக்கு அதிபதி
பாம்பு --------------- ராகு

சாமக்கோள் ஆருடத்தில் கோள்கள் மேற்கண்ட வரிசைப்படி கதிர்,சேய்,பொன்,மால்,புகர்,மந்தன்,மதி,பாம்பு என்ற வரிசைக்கிரமப்படிதான் நிற்கும். ஒரு போதும் மாறாது.


No comments:

Post a Comment